யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
3வது அணியில் கருணாநிதி! : ராமதாஸ் ஆரூடம்
திண்டிவனம் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 15:30 IST )
மாயாவதி தலைமையிலான புதிய 3வது அணியில் திமுக ஐக்கியமாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேறி விட்டாலும், அவர்களுடனான உறவு தொடர்வதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

இடதுசாரிகள் தற்போது 3வது அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடனான உறவை தொடர்வதன் மூலம் 3வது அணியில் சேருவதற்கான கதவை திமுக திறந்து வைத்திருப்பதையே இது காட்டுகிறது.

அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அதற்கு அந்த கட்சிகளே பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என 1992ம் ஆண்டு அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை திமுக கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில் அந்த சட்டத்தில் சில பிரிவுகளை நீக்குவதற்காக கடந்த ஆண்டு சட்டசபையில் ஒரு மசோதாவை கருணாநிதி தாக்கல் செய்தார்.

அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, சமூக விரோத சக்திகள் பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடும். இதற்காக அரசியல் கட்சிகள் மீது பழி சுமத்துவது அநியாயம் என்று சொல்லி அதனை ரத்து செய்ய சட்டம் முன்வடிவு கொண்டு வந்தார்.

ஆனால், திருப்பூரில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பாமகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தையும், பழிவாங்கும் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ம.தி.மு.க.விலிருந்து செஞ்சி., எல்.கணேசன் நீக்கம்!
அணுசக்தி: ஆக‌. 14‌ல் இடதுசாரிகள் மனித சங்கிலி
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...