யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ம.தி.மு.க.விலிருந்து செஞ்சி., எல்.கணேசன் நீக்கம்!
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 14:13 IST )
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கட்டுப்பாட்டுக்கும், கண்ணியத்துக்கும் மாறாக செயல்பட்டதால், அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து எல்.கணேசனும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி ராமச்சந்திரனும் கடந்த 2007 ஜனவரி 10ம் தேதி நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி, வைகோவை பொதுச் செயலாளராக கொண்ட அமைப்புதான் மதிமுக என்று தீர்ப்பளித்தது .

கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கட்சியின் முடிவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் வாக்களித்துள்ளதால், அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி: ஆக‌. 14‌ல் இடதுசாரிகள் மனித சங்கிலி
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...