|
| அணுசக்தி: ஆக. 14ல் இடதுசாரிகள் மனித சங்கிலி |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 12:01 IST ) | |
அணுசக்தி ஒப்பந்தத்தை கண்டித்து ஆகஸ்ட் 14ம் தேதி மாநிலம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 5ல் வேலூர், 8ம் தேதி மதுரை, நெல்லை, கோவை, 10ம் தேதி சேலம், திருப்பூர், 11ம் தேதி தூத்துக்குடி, திருச்சி, 13ம் தேதி திருவாரூர், ஈரோடு ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் கலந்து கொள்கிறார்.
இதுதவிர, முக்கிய நகரங்களில் அடுத்த மாதம் 14ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|