யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
புதுடெல்லி / சென்னை, வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 09:15 IST )
பாமகவுடனான உறவு பற்றி மறுபரிசீலனை இல்லை என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றார். நேற்று மாலை அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இடதுசாரிகள் 3வது அணி அமைத்துள்ள நிலையிலும் அவர்களுடனான எங்களது உறவு தொடர்வதையே நான் விரும்புகிறேன். 3வது அணி என்பது வேறு; இடதுசாரிகளுடனான உறவு என்பது வேறு.

நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சி மாறி வாக்களிக்க எம்பிக்களுக்கு உண்மையிலேயே பணம் கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஜனநாயக படுகொலை.

பா.ம.க.வில் உள்ள ஒரு முக்கியத் தலைவர் என்னை மிகவும் இழிவாக பேசினார். அந்த தொகுதியில் திமுக சட்டசபை உறுப்பினர், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக, சமரச முயற்சிகளை மேற்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி ராமதாசை கேட்டார். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே, இனிமேல் பாமகவுடனான உறவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

சமீபகாலமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேசிய அளவில் முக்கியத்தும் பெற்று வருகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, தாய்க்குலம் ஒருவர் முன்னேறுவதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது என்பது எங்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதில் என்னுடைய தனிப்பட்ட முயற்சி என்று எதுவும் இல்லை.

எனது நீண்டகால அரசியல் அறிவை எனது வீட்டில் இருந்தவர்களே சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதில் வடக்கே டெல்லியில் உள்ள அரசியல் தலைவர் பயன்படுத்திகொள்ள தவறிவிட்டார்கள் என்று கூறுவதில் என்ன இருக்கிறது?. வ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
'மக்களவையில் வெற்றி; மக்கள் மன்றத்தில் தோல்வி'
மக்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி : தமிழக காங்.
பொதும‌க்க‌ள் புகார் மீது உடனடி நடவடிக்கை: ஜா‌ங்‌கி‌ட் உறுதி
2 மதிமுக எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை
'காடுவெட்டி' குரு கைது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...