|
| 'மக்களவையில் வெற்றி; மக்கள் மன்றத்தில் தோல்வி' |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 18:37 IST ) | |
மக்களவையில் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தாலும், மக்கள் மன்றத்தில் இந்த அரசு நம்பிக்கையை இழந்துவிட்டது என்று பாஜகவின் அகில இந்திய செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளிக்கையில், "மக்களவை வரலாற்றில் இல்லாத அளவு ஆளுங்கட்சி தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க குதிரை பேரத்தில் இறங்கி, தகாத முறையில் செயல்பட்டுள்ளது," என்று சாடினார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி என்ற அவர், "பணம் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்க, மக்களவையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்," என்றார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், "அன்றாடம் செத்து செத்துப்பிழைக்கும் நிலையில் அவர்கள் உள்ளனர். இலங்கை கடற்படை நம் எல்லைக்குள்ளேயே வந்து மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டு அவர்களது உடமைகளை பறித்து சென்று விடுகிறது. இதற்கு, மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
கச்சத்தீவை திரும்ப பெற டெல்லி சென்றுள்ள முதல்வர், பிரதமரை வலியுறுத்த வேண்டும். அதிகாரத்தில் உள்ள இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதில் அர்த்தமில்லை," என்றார் திருநாவுக்கரசர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|