|
| பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை: ஜாங்கிட் உறுதி |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 15:10 IST ) | |
'பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் உறுதியளித்துள்ளார்.
நிர்வாக வசதிக்காக சென்னையை போலவே புறநகர் பகுதிகளுக்கும் புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை பரங்கிமலையில் புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதை காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் இன்று திறந்து வைத்தார்.
புறநகர் காவல்துறையின் புதிய ஆணையராக எஸ்.ஆர்.ஜாங்கிட் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் பரங்கிமலை ஆகிய 3 காவல் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் கீழ் 39 காவல் நிலையங்கள் மற்றும் 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படும்.
இதில் தற்போது 3 காவல்துறை துணை ஆணையர்கள் மற்றும் 13 உதவி ஆணையர்கள் உள்ளனர். விரைவில் மேலும் 2 துணை ஆணையர்களும், 14 உதவி ஆணையர்களும், 36 ஆய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50 லட்சம் மக்கள் உள்ளனர். பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|