|
| 2 மதிமுக எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 13:31 IST ) | |
கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மதிமுக எம்.பி.க்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரப்படும் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிமுகவின் போட்டிக் குழுவைச் சேர்ந்த எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய 2 எம்.பி.க்களும், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி கொறடா உத்தரவை மீறி மன்மோகன் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு மதிமுக கொறடா சி.கிருஷ்ணன் கடிதம் எழுத உள்ளதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொறடா உத்தரவை மீறியதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறிக்க முடியும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|