யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'காடுவெட்டி' குரு கைது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 12:10 IST )
தே‌சிய பாதுகா‌ப்பு‌‌ச் ச‌ட்ட‌த்‌தின் கீழ் வ‌ன்‌னிய‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் 'காடுவெ‌ட்டி' குரு கைது ச‌ெ‌ய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வ‌ன்‌னிய‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ரும், பாமக பொருளாளருமான 'காடுவெ‌ட்டி' குரு சார்பில் நேற்று செ‌ன்னை உ‌ய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு ஒன்று தா‌க்க‌ல் செ‌ய்யப்பட்டது.

அதில், 'மா‌வ‌ட்ட அ‌திகா‌ரிக‌ளா‌ல் ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட கைது ஆணை, அ‌திகார து‌ஷ்‌பிரயோக‌ம். 2008-ம் ஆ‌ண்டு ஜனவ‌‌ரி 6-‌ம் தே‌தி, தா‌ன் ஒரு க‌ட்‌சி அமை‌ப்‌பி‌ல் பே‌சிய பே‌ச்‌சி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் த‌ன்னை கைது செ‌ய்தத‌ற்கான ‌பி‌‌ண்ண‌னி அமை‌ந்து இரு‌ப்பதா‌ல், இது ஒரு அர‌சிய‌ல் ப‌ழி வா‌ங்கு‌ம் நடவடி‌க்கை. எனவே, இ‌ந்த கைதை ர‌த்து செ‌ய்யவே‌ண்டு‌ம்' ‌எ‌ன்று‌ கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அந்த மனுவை இன்று விசாரித்த ‌நீ‌திப‌திக‌ள் டி.முருகேச‌ன், எ‌ஸ்.பழ‌னிவேலு அட‌ங்கிய பெஞ்ச், தமிழக அரசு 6 வாரங்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அ‌திமுக ‌பிரமுக‌ர் முருகேச‌‌னை தா‌க்‌கிய வழ‌‌க்கு, வெடிகு‌ண்டு வழ‌க்கு, ‌திமுக மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்களை அவதூறாக பே‌சிய வழ‌க்‌கி‌ல் 'காடுவெ‌ட்டி' குரு கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அதை‌த் தொட‌ர்‌ந்து அவரை தே‌சிய பாது‌கா‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌தி‌‌ல் த‌மிழக அரசு ‌கைது செ‌ய்தது. ‌
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கைக்கு மீனவர் குழுவை அனுப்ப யோசனை!
நாகர்கோவிலில் அதிமுக நாளை உண்ணாவிரதம்
திண்டிவனம்: மின்னல் தாக்கி 5 பேர் பலி
மன்மோகன் வெற்றி: கருணாநிதி டெல்லி பயணம்
த‌மிழ‌க‌த்‌தி‌ல் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தேசிய பாதுகாப்பு சட்ட கைதை எதிர்த்து ஐகோர்ட்டில் குரு மனு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...