யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கைக்கு மீனவர் குழுவை அனுப்ப யோசனை!
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 10:51 IST )
'தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி வலியுறுத்துவதற்காக மீனவ பிரதிநிதிகள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்' என்று தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில மீனவர் கூட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் ஆலோசகர் தேவதாஸ் அ‌ளி‌த்த பே‌ட்டி:

கொழும்பில் கடந்த 20ம் தேதி நடந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் பல்வேறு மக்கள் இயக்கங்கள் பங்கேற்றன. இதில் எங்களது கூட்டமைப்பு சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த 1983ம் ஆண்டுக்கு பின்னர் 200க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 60க்கும் அதிகமானோர் உடலில் பாய்ந்த குண்டுகளை அகற்ற முடியாத நிலையில் நடமாடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழகத்திலும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சாதகமான சூழ்நிலையில் மீனவர் பிரதிநிதிகள் 10 பேர் கொண்ட குழு அல்லது உயர் நிலைக் குழுவை இலங்கைக்கு அனுப்பி, தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாகர்கோவிலில் அதிமுக நாளை உண்ணாவிரதம்
திண்டிவனம்: மின்னல் தாக்கி 5 பேர் பலி
மன்மோகன் வெற்றி: கருணாநிதி டெல்லி பயணம்
த‌மிழ‌க‌த்‌தி‌ல் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தேசிய பாதுகாப்பு சட்ட கைதை எதிர்த்து ஐகோர்ட்டில் குரு மனு
கச்சத்தீவை ஜெ. மீட்டிருக்கலாமே...? : கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...