யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நாகர்கோவிலில் அதிமுக நாளை உண்ணாவிரதம்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 10:35 IST )
மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாக‌ர்கோ‌‌வி‌‌லி‌ல் அ‌திமுக சா‌ர்‌பி‌ல் நாளை உ‌ண்ணா‌விரதப் போரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொது‌ச் செயலாளர் ஜெயல‌லிதா வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை:

க‌ன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகம் அமைப்பதிலும், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளர்ச்சிப் பணியிலும் திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டு காலமாக மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

சுமார் ரூ.25 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வங்கிக் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில், அவர்களுடைய விசைப்படகுகள், வள்ளங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இதை அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய விஷயம்.

மீனவர்களின் இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 24‌ம் தேதி (நாளை) அ‌திமுக சா‌ர்‌பி‌ல் நாகர்கோவிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறு‌ம். இவ்வாறு அதில் கூ‌றப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திண்டிவனம்: மின்னல் தாக்கி 5 பேர் பலி
மன்மோகன் வெற்றி: கருணாநிதி டெல்லி பயணம்
த‌மிழ‌க‌த்‌தி‌ல் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தேசிய பாதுகாப்பு சட்ட கைதை எதிர்த்து ஐகோர்ட்டில் குரு மனு
கச்சத்தீவை ஜெ. மீட்டிருக்கலாமே...? : கருணாநிதி
மதுரையில் செப்.17ல் மதிமுக மண்டல மாநாடு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...