|
| திண்டிவனம்: மின்னல் தாக்கி 5 பேர் பலி |
| திண்டிவனம் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 10:25 IST ) | |
திண்டிவனம் அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.
திண்டிவனம் அருகேயுள்ள சாலாவதி என்ற கிராமத்தில் தொழிலாளர்கள் வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பலத்த மழை பெய்ய துவங்கியது.
இதனால், தொழிலாளர்கள் அனைவரும் அருகேயுள்ள வேப்ப மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, பலத்த இடியுடன் உருவான மின்னல் வேப்ப மரத்தை தாக்கியது. இதில் மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தவர்களில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
பலத்த காயமடைந்த 7 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|