|
| மன்மோகன் வெற்றி: கருணாநிதி டெல்லி பயணம் |
| சென்னை (ஏஜென்சி), 23 ஜூலை 2008 ( 09:04 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் முதல்வர் கருணாநிதி நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டு காலமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றியத் தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்கள் இவற்றிற்கு கிடைத்த வெற்றி இது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப்போடுவதற்காக எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அது ஒரு ஜனநாயக படுகொலை தான்.
இந்த வெற்றியின் மூலம் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொன்னால், அது நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பாதிக்கும்.
ஒகேனக்கல் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருப்பதுபோல் அது சட்ட விரோதம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|