யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கச்சத்தீவை ஜெ. மீட்டிருக்கலாமே...? : கருணாநிதி
சென்னை (ஏஜென்சி), 22 ஜூலை 2008   ( 15:18 IST )
'த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்காக உ‌ண்ணா‌ விரத‌ம் இரு‌ந்ததை க‌ண் துடை‌ப்பு நாடக‌ம் எ‌ன்பதா' என்று அ‌திமுக பொது‌ச் செயலாளர் ஜெய‌ல‌லிதாவு‌க்கு முத‌ல்வர் கருணா‌நி‌தி க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில், 'கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயா கூறுகிறாரே?' என்ற கேள்விக்கு கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15‌ம் தேதி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று "கச்சத் தீவை மீட்டே தீருவேன்'' என்று முழங்கிய ஜெயலலிதா, அதற்கு பிறகு 5 ஆண்டு காலமும், அதற்கு பிறகும் 2001 முதல் 2006 வரை 5 ஆண்டு காலமும் ஆட்சியிலே இருந்தாரே.

அப்போது கச்சத் தீவை மீட்டு விட்டாரா அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா? எ‌ன்று கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பாரதிய ஜனதா கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே? எ‌ன்று கே‌ள்‌விக்கு, ''எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியினை அடைய முடியாது.

அணுசக்தி ஒப்பந்தம் உள்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன்' எ‌ன்று கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

'தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் போல மத்திய அரசு காட்சி அளிக்கிறது என்று அத்வானி நாடாளுமன்ற‌த்‌தி‌‌ல் பே‌சி இரு‌‌க்‌கிறாரே?' எ‌ன்று கே‌ள்‌விக்கு 'அவருடைய தகுதிக்கு அந்த பேச்சு சரியல்ல' எ‌ன்று ‌ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மதுரையில் செப்.17ல் மதிமுக மண்டல மாநாடு!
அரசு வழக்கறிஞர் நியமனம் : சங்கராச்சாரியார் கோரிக்கை ஏற்பு
மருத்துவமனையில் சங்கரய்யா!
தஞ்சை: 27‌ம் தே‌தி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
2 சிறுவர் கொலை: கொலையாளிக்கு சாகும் வரை சிறை
செம்மொழி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி: முதல்வர் வழங்கினார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...