|
| மதுரையில் செப்.17ல் மதிமுக மண்டல மாநாடு! |
| மதுரை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 13:05 IST ) | |
மதுரையில் வரும் செப்டம்பர் 17ம் தேதி மதிமுக மண்டல மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறியதாவது:
நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு தோல்வியடையும். ஒருவேளை தப்பி பிழைத்தாலும்கூட, விரைவில் லோக்சபை தேர்தல் நடைபெறும். இதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்தால் நிலக்கரி துறையை ஒதுக்குவதாக ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் சிபுசோரனுக்கு காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
இதை சிபுசோரனே தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதலை தடுக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்று நாடகம் நடத்துகிறது.
மதுரையில் வரும் செப்டம்பர் 17ம் தேதி மதிமுக மண்டல மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|