|
| கொலை குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: டி.ஜி.பி |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜூலை 2008 ( 10:01 IST ) | |
சென்னையில் தொடர்ந்து கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் சமீபகாலமாக நடைபெற்று வரும் தொடர் கொலைகள் குறித்து முக்கிய தடயம் கிடைத்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள்.
எதற்காக இந்த தொடர் கொலைகள் நடைபெறுகிறது. குற்றவாளி யார் என்பது போன்ற விவரங்கள் விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்.
ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் பல வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்துள்ளோம்.
சென்னை நகரில் சமீபகாலமாக தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலம் பகுதியில் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|