|
| நளினி வழக்கு: சுப்பிரமணிய சுவாமி மனு தள்ளுபடி |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜூலை 2008 ( 09:52 IST ) | |
நளினி வழக்கில் ஜனதா தளம் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.எஸ். நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'சுப்பிரமணிய சுவாமியை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க முடியாது' என்று கூறினார்.
முன்கூட்டியே நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனு தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே, இந்த வழக்குத் தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும், எனவே சுப்பிரமணிய சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், சுப்பிரமணியம் சுவாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|