யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராமேஸ்வரம் : 6 வது நாளாக மீனவர்கள் வேலை ‌நிறு‌த்த‌ம்
ராமேஸ்வரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008   ( 18:13 IST )
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கட‌ற்படை‌யின‌ர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலை ‌நிறு‌த்த‌ம் இன்று 6 வது நாளாக ‌‌நீடி‌த்தது.

இலங்கை கடற்படை நடத்தி வரும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி கடந்த 3 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

800க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி மற்றும் அதைச் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள 32,000 பேர் இந்த வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை ‌நிறு‌த்த‌த்தை முடிவுக்கு கொண்டு வர ராமநாதபுரம் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஆறாவது நாளாக இ‌ன்று‌ம் நீடித்தது.

மீனவர்கள் வேலை ‌நிறு‌த்த‌த்தால் ராமேஸ்வரம் பகுதியிலுள்ள கடைவீதிகள், வணிக நிறுவனங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கடல்தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயல‌ர் சேது முருகானந்தம் கூறுகையில், ''இந்த விஷயத்தில் மத்திய அரசும், வெளியுறவுத்துறையும்தான் தலையிட்டு பேசவேண்டுமே தவிர, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் கண்துடைப்பே'' என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குருவை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
கட்சியில் கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை : தங்கபாலு
திருப்பூரில் அரசு பஸ் எரிப்பு : பாமக நிர்வாகிகள் 2 பேர் கைது
சோனியா காந்தியின் முடிவை ஏற்கிறேன் : கிருஷ்ணசாமி
'காடுவெட்டி' குருவின் உயிருக்கு ஆபத்து : ராமதாஸ்
கா‌ந்‌தி ம‌ண்ட‌ப‌த்தை மே‌ம்படு‌த்த பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...