யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜூலை 4‌ ல் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு
சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜூலை 2008   ( 17:44 IST )
நீதிமன்ற ஊழியர்களை ‌‌நீ‌திப‌திகளாக நியமிக்க எ‌‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழக, புதுச்சேரி வழக்கறிஞர்கள் ச‌ங்கமு‌ம், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஜூலை 4ஆ‌ம் தே‌தி ‌நீ‌‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்தப் போவதாக அறிவித்துள்ளன.

தமிழக‌த்‌தி‌ல் 201 மாஜிஸ்திரேட் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வில் பி.எல். மதுரை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யிலு‌ம், மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளிலு‌ம் ப‌ணியா‌ற்று‌பவ‌ர்க‌ள் ‌சி‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌நீ‌திப‌தி ப‌ணி‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் என சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று முத‌ல் வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் தொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம், புது‌‌ச்சே‌ரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

வழ‌க்க‌றிஞ‌ர்களாக பதிவு செய்து தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 4 ம் தேதி வரை தமிழகம், மட்டும் புதுச்சேரி வக்கீல்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று
‌தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் சீராகியது பெட்ரோல், டீசல் விநியோகம்
திருச்சி அருகே படகு கவிழ்ந்து 2 பேர் பலி
ஆகஸ்ட் 15-ல் 8 மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. தொடக்கம்
அகதிகளுக்கு குடியுரிமை கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திருமா
ரூ.4,790 கோடியில் சுத்திகரிப்பு ஆலை : கருணாநிதி அடிக்கல்
அடையாறு கரையில் ரூ.50 லட்சத்தில் சுற்றுச்சூழல் பூங்கா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...