|
| நான் நலமாக இருக்கிறேன்: கருணாநிதி பேட்டி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 18:39 IST ) | |
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதி, தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கழுத்து வலி மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த முதலமைச்சர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
பூரண குணமடைந்து வீடு திரும்பும்வரை யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதியை மனைவி தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் மற்றும் குடும்பத்தினர் அருகே இருந்து கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வருவது குறித்து முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
நான் ஒவ்வொரு முறை மருத்துமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளும்போது, அந்த செய்தி பெரிதாக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
ஆனால், தொண்டர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். என்னை பார்ப்பதற்காக சென்னை வர விரும்புகின்றனர்.
என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்பதற்காகவே மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகிறேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|