|
| செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா : அன்பு மணி தகவல் |
| சென்னை (ஏஜென்சி), 17 மே 2008 ( 17:25 IST ) | |
செங்கல்பட்டில் 400 ஏக்கர் நிலத்தில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசி மற்றும் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், 200 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பூங்காவும், இன்னும் 200 ஏக்கர் நிலத்தில் தடுப்பூசி பூங்காவும் அமைக்கப்படும் என்றார்.
தடுப்பூசி பூங்காவுக்கான 200 ஏக்கர் நிலத்தில் 100 ஏக்கரில், ரூ.300 முதல் 500 கோடி முதலீட்டில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.
இந்த தடுப்பூசி மையத்தில் இந்தியாவின் எதிர்கால நோய் தடுப்பு திட்டத்திற்கு தேவையான அனைத்து வகையான தடுப்பூசிகளும் தயாரிக்கப்படும்.
மேலும் வளரும் நாடுகளுக்கும் இங்கிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்.
தடுப்பூசி பூங்காவில் எஞ்சியுள்ள 100 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்டு , அங்கு முதலீடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்படும்.
மேற்கூறிய மருத்துவ மற்றும் தடுப்பூசி பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.இன்னும் இரண்டாண்டுகளில் இந்த உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி மையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என அன்பு மணி மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|