|
| உணவு பண்டங்களின் விலை: ஓட்டல்களுக்கு அரசு எச்சரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 16:35 IST ) | |
இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்ற உணவுப் பண்டங்களின் விலையை, அனைத்து உணவகங்களும் குறைக்கவில்லையெனில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், தமிழக ஓட்டல்கள் சங்க நிர்வாகிகளுடன், உணவு அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனை நடத்தியதாகவும், ஓராண்டு காலம் நிறைவடைந்த பிறகும் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படாமல் அதிகமாகவே உள்ளது என்பதை அவர் சுட்ட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்றவை அன்றாடம் பொதுமக்கள் விரும்பி உண்ணும் உணவு என்பதால் இவற்றின் விலை உடனடியாக கட்டுபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1976-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த சில கடுமையான சட்டங்களைப் போல அரசு மீண்டும் சட்டம் இயற்றக் கூடிய நிலையை உணவகங்கள் ஏற்படுத்தக் கூடாது என்று அமைச்சர் அமைச்சர் வேலு எச்சரித்துள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடனடியாக உணவுப் பண்டங்களின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உறுதிமொழி அளித்துள்ளார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|