யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராமதாஸ் நடுநிலையை பின்பற்றவில்லை : பொன்முடி
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 15:45 IST )
உயர் கல்வித்துறையின் 2 ஆண்டு கால செயல்பாட்டை நடுநிலையோடு விமர்சிக்காமல், பாமக நிறுவனர் ௦ராமதாஸ் ஓர் உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சித்துள்ளார் எ‌ன்று அமைச்சர் பொன்முடி கு‌ற்ற‌ம்சாட்டியு‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது:

ஆகாத பொண்ணாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கிராம பழமொழியை ராமதாஸ் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் உயர் கல்வித்துறையின் 2 ஆண்டு செயல்பாட்டை நடுநிலையோடு விமர்சிக்காமல் ஓர் உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சித்துள்ளார்.

சட்ட சிக்கல்களை சமாளித்து தொழிற்படிப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் 43.9 ‌சதவிகிதம் பேர் கூடுதலாக பயன் பெற்றனர். கடந்த ஆட்சியில் அரசு ஒதுக்கீடு 50 ‌சதவிகிதமாக இருந்ததை 65 ‌சதவிகிதமாக இந்த அரசு உயர்த்தியதால் சுமார் 56,000 பேர் பயனடைந்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டு, இலவச பேரு‌ந்து பாசும் வழங்கப்படுகிறது. உயர் கல்வியில் கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை என்று "உள்நோக்கமே இல்லாத உண்மை விளம்பி' கூறுகிறார்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான். அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிப்பெண்கள் குறைத்ததற்கு கூட உள்நோக்கம் கற்பிப்பது காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதி விரைவில் குணமடைய மன்மோகன் வாழ்த்து
சென்னை வெயில்: 2 நாட்களுக்கு அனல் பறக்கும்
கருணாநிதி உடல் நலம் : சோனியா நலம் விசாரித்தார்
ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல்
விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி
குண்டர் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகி விடக்கூடாது: திருமா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...