|
| சென்னை வெயில்: 2 நாட்களுக்கு அனல் பறக்கும் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 13:31 IST ) | |
அக்னி நட்சத்திரம் வெயில் சென்னை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்னும் இரு தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடைக்காலம் ஆரம்பித்திலிருந்தே வெயில் கடுமை தீவிரமாக இருந்தது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயிலும் துவங்கியது.
இதனால், தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெயிலின் கொடுமை தீவிரமாக உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
சென்னையிலும் வெயிலும் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று 108 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
சென்னை வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "சென்னையில் கடந்த இரு தினங்களாக 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதே நிலை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும்.
அதிக வெப்பம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|