|
| ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 10:40 IST ) | |
தனது ராஜினாமா பற்றி கருத்து கூற, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் பூங்கோதை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்திற்காக மறைந்த தன்னுடைய தந்தையை பற்றிக் கூறுவது அரசியல் நாகரீகமாகாது என்று சாடியுள்ளார்.
எல்லா தருணங்களிலும் என்றென்றும் திமுகவின் தலைவரும், எங்கள் முதல்வருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே தாம் பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய அவருக்கு, தன்னால் சிறு அளவில்கூட எவ்வித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ராஜினாமா கடிதத்தை அளித்தாக கூறியுள்ளார்.
இந்த விஷயம் குறித்து கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்தவித யோக்கியதையோ, அருகதையோ இல்லை என்றும், ஜெயலலிதா மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டன என்று இந்த நாட்டிற்கே தெரியும் என்றும் பூங்கோதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|