|
| விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 10:29 IST ) | |
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை ஜெயபால் ரெட்டி தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மதுரவாயல் நகராட்சி வரலட்சுமி நகரில், ரூ.23 கோடியே 30 லட்சம் செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி நேற்று அவர் பேசினார்.
அப்போது, "சென்னையில் ரூ.9 ஆயிரத்து 757 கோடி செலவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 23 கி.மீ. தூரமும், 2-ம் கட்டமாக 22 கி.மீ. தூரமும் ரெயில் போக்குவரத்து அமைக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்னும் சில மாதங்களில் நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.
இவ்விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் தினசரி 135 லிட்டர் குடிநீர் பெற முடியும். வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலமும் குடிநீர் வழங்கப்படும். இதற்கு இணைப்பு கட்டணம் கிடையாது. இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.56 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|