யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
குண்டர் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகி விடக்கூடாது: திருமா
நெய்வேலி (ஏஜென்சி), 17 மே 2008   ( 10:12 IST )
குண்டர் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நெய்வேலியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், தமிழக அரசின் 2 ஆண்டு செயல்பாடு குறித்து ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்கு தான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில இடங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறிய அவர், தீண்டாமையை எதிர்த்து உத்தப்புரத்தில் சுவர் இடிக்கப்பட்டது தலித் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார்.

மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள குண்டர் சட்டம் அவசியம், அதை வரவேற்கிறோம் என்ற அவர், அதே நேரத்தில் இந்த குண்டர் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்பதை அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல்
விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி
ஐ.ஏ.எஸ். தேர்வு : இந்திய அளவில் சென்னை மாணவர் 3-ம் இடம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு முடிவு : தமிழகத்தில் 79 பேர் தேர்ச்சி
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் : மு.க.ஸ்டாலின்
ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே 5 பே‌ர் வெ‌ட்டி‌க் கொலை !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...