|
| ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு முடிவு : தமிழகத்தில் 79 பேர் தேர்ச்சி |
| சென்னை (ஏஜென்சி), 17 மே 2008 ( 09:48 IST ) | |
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் இருந்து 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வுகளில், நாடு முழுவதும் மொத்தம் 734 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்டவரும், தற்போது சென்னை - சூளைமேட்டில் வசித்து வருபவருமான எஸ்.வினோத், அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில், டெல்லியில் அரசுப் பணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த லலிதா லட்சுமி 20-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வகையான அ அரசுப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தேறி, 9,800 பேர் அகில இந்திய அளவில் முதன்மைத் தேர்வை எதிர்கொண்டனர். முதன்மைத் தேர்வை தமிழகத்தில் இருந்து 675 பேர் எழுதினர். இதில் தேர்ச்சியடைந்து, நேர்முகத் தேர்வில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட ௦210 பேரில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|