|
| கருணாநிதி நலமுடன் இருக்கிறார் : மு.க.ஸ்டாலின் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 08:47 IST ) | |
முதல்வர் கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் உடல்நலம் பற்றி பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த மதுரவாயலில் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதியின் உடல்நிலைப் பற்றி கூறினார்.
கழுத்து வலி, முதுகு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அவர் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பப்படுகிறது என்றும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ வேண்டும் என்பதற்காக ஒருசிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் கருணாநிதியை, மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கவிஞர் கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதல்வருடன் அவரது துணைவியார் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகியோர் உள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|