யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விதிமுறை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை தேவை : காங்.
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 16:28 IST )
அரசின் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‌சில த‌னியா‌ர் க‌‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள் ‌வியாபார‌க் கூட‌ங்களாக மா‌றி‌, ‌சீர‌ழிவு‌ப் பாதையை நோ‌க்‌கி ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிருப்பதாக கவலைத் தெரிவித்துள்ளார்.

த‌னியா‌ர் பொ‌றி‌யிய‌ல், மரு‌த்துவ‌க் க‌ல்‌வி ம‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் ப‌யி‌ற்‌சி ‌நிறுவன‌ங்க‌ள் இ‌ன்றை‌க்கு ஏழை எ‌ளிய, நடு‌த்தர குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த மாண‌‌வ‌ர்களை ஏதோ சமூக‌த்‌தி‌ல் ஒது‌க்க‌ப்ப‌ட்ட இன‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்களை‌ப் போல புற‌க்க‌ணி‌த்து வச‌திபடை‌த்த ம‌ற்று‌ம் அய‌‌ல்நா‌ட்டு மாணவ‌ர்க‌ளிட‌‌ம் அரச‌ி‌ன் ச‌ட்ட ‌தி‌ட்ட நடவடி‌க்கைக‌ள் ம‌ற்று‌ம் ‌வி‌திமுறைகளையு‌ம் ‌மீ‌றி பலவாறாக அ‌திக‌ப் பண‌த்தை கற‌ந்து‌ம் ‌விடு‌கி‌ன்றன‌ என்று அவர் சாடியுள்ளார்.

இதுபோ‌ன்ற த‌னியா‌ர் க‌ல்லூ‌ரி ‌நிறுவன‌ங்களா‌ல் வச‌தியான மாணவ‌ர்களுக‌்கு‌த் தர‌ப்படு‌ம் க‌ல்‌வியா‌ல் அரசு‌க்கு‌ம், ம‌க்களு‌க்கு‌‌ம் பய‌னில்லை என்றும், பெரு‌ம்பாலு‌ம் அய‌ல்நாடுகளையு‌ம், நா‌ட்டிலு‌ள்ள பெருமுதலா‌ளிக‌ள் மேலு‌ம் ‌மிக‌ப்பெரு‌ம் முதலா‌ளிகளாக உருவா‌க்கவே போ‌ய்‌ச் சேரு‌கிறது என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

க‌ல்வ‌ி அனை‌த்து‌ப்‌ ‌பி‌ரிவு ம‌க்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் வகை‌யி‌ல் அரசு ப‌ல்வேறு வ‌ழிமுறை வகு‌த்து நடவடி‌க்கைக‌ள் எடு‌‌த்து‌ம், அதையு‌ம் ‌மீ‌றி ‌சில த‌னியா‌ர் க‌ல்லூ‌ரி நிறுவன‌ங்க‌ளி‌ல் ம‌க்க‌ள் ‌விரோத நடவடி‌க்கையாக த‌ற்போது ‌நில‌வி வரு‌ம் அ‌திக க‌ட்டண வசூலு‌க்கு கடிவாள‌ம் போட வே‌ண்டு‌ம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், த‌மிழக அரசு‌ம், அ‌திகா‌ரிகளு‌ம் ‌‌மிகு‌ந்த க‌ண்கா‌ணி‌ப்போடு அ‌தி‌ல் முழு‌க்கவன‌த்தைச் செலு‌த்‌தி, அ‌ந்த அ‌நியாயத்தை தடு‌த்து ‌நிறு‌த்தா‌விடி‌ல் க‌ல்‌வி த‌மிழக‌த்த‌ி‌ல் தலைசா‌ய்‌ந்து ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம் எ‌ன்பதை ‌மிகு‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கையோடு தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சாடவில்லை : கருணாநிதி
முதல்வர் கருணா‌நி‌தி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!
'பூங்கோதை ராஜினாமா: திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி!
தமிழகத்தில் புதிய தீவிரவாத அமைப்பு : 3 பேர் கைது
மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் மடிக்கணினி
உண்மையை கூறினால் கசக்கத்தான் செய்யும்: ராமதாஸ் காட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...