|
| 'பூங்கோதை ராஜினாமா: திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி! |
| திண்டுக்கல் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 12:33 IST ) | |
'அமைச்சர் பூங்கோதை ராஜினாமா விவகாரம் திமுக அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணி' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வரதராஜன் கூறியதாவது:
லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்ற முயன்ற விவகாரம் வெளியானதன் விளைவுதான் பூங்கோதையின் ராஜினாமாவாக மாறியுள்ளது. இது திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.
எனவே அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்த பிரச்னையிலும் முதலமைச்சர் கருணாநிதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில், மத நல்லிணக்கம், சமுதாய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு போன்றவை எங்களை பொருத்தவரை திருப்தி அளிக்கின்றன.
அதே நேரத்தில் சுகாதாரத்துறை குறைபாடுகள், அரசு மருத்துவமனைகள் சரிவர இயங்காமை போன்றவை கவலை அளிக்கின்றன. காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|