|
| மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் மடிக்கணினி |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 10:28 IST ) | |
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் மடிக்கணினிகள் (லேப்டாப்) விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நிறுவனமான எல்காட் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21,000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும்.
320 ஜி.பி. ஹார்ட் டிஸ்க், 2 ஜி.பி. ராம், டி.வி.டி. ரைட்டர், 15.4 அங்குல மானிட்டர், மோடம், புளூ டூத், வெப் கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தக் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கம்ப்யூட்டர் வழங்கப்படும். கம்ப்யூட்டர் வாங்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக எல்காட் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|