|
| உண்மையை கூறினால் கசக்கத்தான் செய்யும்: ராமதாஸ் காட்டம் |
| சென்னை (ஏஜென்சி), 16 மே 2008 ( 10:28 IST ) | |
'அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கினால் 'கூட இருந்தே குழிபறிப்பதாக பழி சுமத்துவதா?' என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசின் மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 61 குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, எதிர்கட்சியாக இருந்து அரசின் குறைகளை இடித்து சொல்லும் கடமையை செய்வதாக பாராட்டியுள்ளார்.
ஆனால், அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்கள் மீது 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துகிறார். இதன்மூலம் எங்களை திசை திருப்பிவிட முடியாது.
மாநிலத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகள் உள்பட 7 கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுத்த ஒரு வாரத்தில் 5 அரசு கல்லூரிகளை கிடப்பில் போட்டுவிட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைக் கழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்தது ஏன்?
எதிர்கட்சிகள் விழிப்பாக இருந்ததால் அந்த மசோதாக்கள் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாக்களையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்க உரிமை இல்லையா? தோழமை என்பதால் உயர்கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளை பொறுத்துக்கொள்ள வேண்டுமா?
உயர்கல்வி துறை செயல்பாட்டில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமில்லை. உயர் கல்வியில் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கட்டணக் கொள்ளையும், கட்டாய நன்கொடையும் தடுக்கும் சட்டங்கள் கோட்டையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
விருந்து கசப்பது ஒருபுறம் இருக்கட்டும், சில நேரத்தில் உண்மையே கசக்கத்தான் செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|