யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராமதாஸின் மதிப்பீட்டால் வருத்தமில்லை : கருணாநிதி பதில்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 10:10 IST )
பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கு பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்து விடாது; அவர் சொல்வதால் தனக்கு ஒன்றும் வருத்தமில்லை என்று முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

திமுக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியை மதிப்பிட்ட ராமதாஸ், 'ஒட்டு மொத்தத்தில் தேர்வு பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:

நான் ஏற்கனவே எல்லா பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாய தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும், ஏன்? பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்து விடாது.

நான் எஸ்.எஸ்.எல்.சி.யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு முதல்-அமைச்சராகவே ஆகியிருக்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு கிரெடிட்டாகவே கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 13-ம் தேதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து 3-வது ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த இரண்டாண்டில் அதன் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? என்றும், இந்த அரசின் செயல்பாட்டிற்கு மதிப்பெண் போடுவாதாக இருந்தால் எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?, இந்த அரசு தேர்வு பெற்றுவிட்டது என்று கருதுகிறீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, "ஒட்டு மொத்தத்தில் தேர்வு பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்'' என்று அவர் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மறியல் : மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
நூல் விலை உயர்வு: கரூரில் நாளை உண்ணாவிரதம்
தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலி
கர்நாடக தேர்தல்: தமிழக எல்லையில் போலீசார் சோதனை
ப்ள‌ஸ் 2: முத‌‌லிட‌ம் பெற்ற மாணவ‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ப‌ரிசு
சென்னை ம‌க்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டாம் : நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...