யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நூல் விலை உயர்வு: கரூரில் நாளை உண்ணாவிரதம்
கரூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008   ( 18:51 IST )
நூல் விலை உயர்வை கண்டித்து கரூரில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் குமார் கூறியதாவது:

கழிவுப் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் மோட்டா ரக நூல் உற்பத்தி தடைபடுகிறது. அதோடு, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியும் குறைகிறது.

இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், சீரான விலையில் நூல்கள் கிடைப்பதில்லை.

கரூர், திருப்பூர், ஈரோடு, குமாரபாளையம், சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலக்கும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

நூற்பாலைகளில் சிட்டா நூல் உற்பத்தியையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜவுளி கூட்டமைப்பு சார்பில் நாளை ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலி
கர்நாடக தேர்தல்: தமிழக எல்லையில் போலீசார் சோதனை
ப்ள‌ஸ் 2: முத‌‌லிட‌ம் பெற்ற மாணவ‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ப‌ரிசு
சென்னை ம‌க்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டாம் : நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்
பூ‌ங்கோதையை போல் கருணா‌நி‌தியும் விலகுவாரா? : ஜெ.
சட்டசபைக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...