|
| தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலி |
| மணப்பாறை (ஏஜென்சி), 15 மே 2008 ( 18:37 IST ) | |
மணப்பாறையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வி.பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பழனி-விஜயா. இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு அனியாப்பூர் சந்தைப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு 10 மணியளவில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு ன்றனர்.
ஆனால், அதற்குள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|