|
| பருவ நிலை மாற்றம் : தமிழக அரசு ஆய்வு நடத்த முடிவு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 18:38 IST ) | |
உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள பருவ நிலை மாற்றம் பிரச்சனை தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் மைதீன்கான் பதில் அளித்து பேசினார்.
அப்போது, "தமிழகத்தில் பருவநிலை மாறுதலால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கவும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறியவும் 2008-09-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் செலவில் அண்ணா பல்கலைக்கழகம்-சென்னை ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றுக்கு பருவ நிலை மாற்றம் காரணமாக இருப்பதால், இதுதொடர்பான ஆய்வு அவசியாகிறது என்று அமைச்சர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|