யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'இடஒது‌க்‌கீடு : த‌லி‌த்து‌க்களு‌க்கு மதப்பாகுபாடு கூடாது'
திருச்சிராப்பள்ளி(ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 18:28 IST )
தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் மதப்பாகுபாடு கூடாது என்றும், அவர்கள் ந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றும் ந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் செ‌ய்‌தியாள‌‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யின்போது இதனை தெரிவித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா , மேலும் கூறியதாவது :

புத்த மதம், சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் போது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு மட்டும் ஏன் இட ஒதுக்கீடு இல்லை? தலித்துகள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.

பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை; நடவடிக்கைகளில் இருந்து தவறியிருக்கிறது. சந்தை சக்திகளின் முன் மத்திய அரசு செய்வதறியாது தவித்து, கைகட்டி நிற்கிறது.

விலைவாசி தானாகக் குறையும் என்றும் நம்புகிறது. உணவு உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், விலைவாசி குறையவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தவிர, விலைவாசியைக் குறைக்க முடியாது.

கச்சத்தீவு உடன்பாட்டில், இந்திய மீனவர்கள் அந்தத் தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்றெல்லாம் உள்ளது. ஆனால், மீன் பிடிக்கலாமா? என்பது குறித்த விளக்கங்கள் தெளிவாக இல்லை. எனவே, அந்த உடன்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜி.எச்.-ல் குழந்தை திருட்டை தடுக்க கால்ரேகை பதிவு!
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழக காங். கண்டனம்
மே 17ல் 'மக்களை தேடி மாநகராட்சி' திட்டம்!
டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: விசாரணை தொடங்கியது
தமுமுகவுக்கு தடைவிதிக்க விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
இலங்கை அகதிகள் 35 பேர் ராமேஸ்வரம் வருகை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...