|
| வேலைவாய்ப்பு : புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை! |
| சென்னை (ஏஜென்சி), 14 மே 2008 ( 12:16 IST ) | |
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 01.01.2007 முதல் 31.12.2007 வரையுள்ள காலத்தில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசாணை நிலை எண்.48, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, நாள் 06.05.2008 -இன்படி சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்படி காலத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் 05.08.2008-க்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாள் ஒன்றில் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மனு செய்து தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|