யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பு‌லிகளை ஆத‌ரி‌க்கு‌ம் க‌ட்‌சிகளு‌க்கு தடை : காங். வலியுறுத்தல்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 19:06 IST )
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாசெயல்படும் ட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது .

தமிழக சட்ட‌சபையி‌ல் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சில கட்சிகளும், அமைப்புகளும் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அத்தகைய அமைப்புகளையும், கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்றார்.

அவர் மேலும் பேசியதாவது : மனிதநேயத்தோடும், அறநெறியோடும் காவல்துறை செயல்பட வேண்டும். காவிஉடை தெய்வபக்திக்கு அடையாளம். கதர் உடை தேசபக்திக்கு அடையாளம்.

அதேபோல காக்கி உடை கடமைக்கு அடையாளம். காவல்துறை தவறு செய்தால் அது முதலமைச்சரை தான் பாதிக்கும்.எனவே இந்த துறை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.

சென்னை நகரில் வாகன நெரிசல் அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் அதிகம். இதனால் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு சென்னை மாநகர போக்குவரத்து ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடங்கிய இந்த குழு வழங்கும் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல்பட்டால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயக்குனர் தேர்தல் ரத்து: முதல்வரிடம் முறையிட முடிவு
காவல்துறையினருக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு
நடப்பாண்டில் ரூ.110 கோடியில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்பு
திருச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி : முதல்வர் அறிவிப்பு
ரா‌‌‌‌ஜீ‌வ் ‌‌‌நினைவு நா‌ள் : தொண்டர்களுக்கு காங். வே‌ண்டுகோ‌ள்
காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace