யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இயக்குனர் தேர்தல் ரத்து: முதல்வரிடம் முறையிட முடிவு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 18:52 IST )
திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் முறையிட இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைதொடர்ந்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடப்பதாக இருந்தது.

இதில், தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் முன்னாள் தலைவர் ஆர்.சி.சக்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நடிகர் ஜே.கே.ரித்திஷின் ஆதரவாளர் பாவா என்பவர் தலைமையில் சில இயக்குர்கள் மற்றும் இணை இயக்குர்களும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தனர். இதனால், இயக்குனர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், ஆர்ட் டைரக்டர்ஸ் யூனியன் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அப்போது வங்கு வந்த ரித்திஷ் ஆதரவாளர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு போடப்பட்டிருந்த பந்தலை அடித்து நொறுக்கியதோடு, சில முன்னணி இயக்குனர்களயும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். எனினும், அந்த கும்பல் வன்முறையை நிறுத்தவில்லை. இதன் காரணமாக, காலவரையின்றி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் நடந்த இயக்குனர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, பிரபல இயக்குனர்கள் பலர், ரித்திஷையும், அவரது ஆதரவாளர்களையும் கண்டித்து பேசினர்.

சமீபத்தில் 'கானல் நீர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரித்திஷ், தமிழக அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன் ஆவார். இவர் அமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காவல்துறையினருக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு
நடப்பாண்டில் ரூ.110 கோடியில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்பு
திருச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி : முதல்வர் அறிவிப்பு
ரா‌‌‌‌ஜீ‌வ் ‌‌‌நினைவு நா‌ள் : தொண்டர்களுக்கு காங். வே‌ண்டுகோ‌ள்
காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம்
திருவள்ளூர்: தீ விபத்தில் தாயும் மகளும் பலி; 6 குடிசைகள் சாம்பல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace