யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
காவல்துறையினருக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 16:28 IST )
காவல்துறையினருக்கான இடர்படி உயர்வு, மாதாந்திர எரிப்பொருள் அளவு உயர்வு என பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில் அறிவித்த சலுகைகளாவன:

* இனிவரும் காலங்களில் காவலர்களுக்கான ரேஷன் பொருட்களில் எண்ணெய், பருப்பு வகைகளுக்கும் 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

* தமிழ்நாடு காவல்துறை கருணை கொடை திட்டத்திற்கான அரசின் பங்கு ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

* காவல் நிலைய வாகனங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர எரிப்பொருள் அளவு 60 லிட்டரிலிருந்து 150 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

* காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தற்போது மாதம் ஒன்றுக்கு 120 ரூபாயாக வழங்கப்படும் இடர்படி ரூ.180ஆகவும், துணை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் இடர்படி ரூ.140-லிருந்து ரூ.210ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* காவலர்களுக்கான சீருடை தையல் கூலி ரூ.150லிருந்து ரூ.250ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால் தற்போது வழங்கப்படும் சம்பளத்தை விட கூடுதல் சம்பளம் காவலர்களுக்கு கிடைக்கும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் காவல்துறைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 10-ம் வகுப்புக்கு தற்போது வழங்கப்படும் 3 பரிசுகளை 10 பரிசுகளாகவும், 12-ம் வகுப்புக்கு தற்போது வழங்கப்படும் 3 பரிசுகளை 10 பரிசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* காவலர் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது தற்போது அவர்களின் உயர் படிப்பின் மொத்த காலத்திற்கும் சேர்த்து முதல் மதிப்பெண் வாங்குபவர்களுக்கு தவணைகளில் 40 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடம் வரை மதிப்பெண் பெறுபவர்களுக்கு நான்கு தவணைகளில் 20 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் ஒன்பது பேருக்கு வழங்கப்படுகிறது.

இனிமேல், இந்த உதவித் தொகை பெற விண்ணப்பம் அளிப்பவர்களில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணமோ அல்லது 20 ஆயிரம் ரூபாயோ இதில் எது குறைவோ அந்தத் தொகை அவர்கள் மேற்படிப்பு முடியும் வரை அளிக்கப்படும்.

மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரையையொட்டி, இத்திட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடப்பாண்டில் ரூ.110 கோடியில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்பு
திருச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி : முதல்வர் அறிவிப்பு
ரா‌‌‌‌ஜீ‌வ் ‌‌‌நினைவு நா‌ள் : தொண்டர்களுக்கு காங். வே‌ண்டுகோ‌ள்
காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம்
திருவள்ளூர்: தீ விபத்தில் தாயும் மகளும் பலி; 6 குடிசைகள் சாம்பல்
நட‌ப்பா‌ண்டி‌ல் தமிழக உணவு உ‌ற்ப‌த்‌தி அதிகரிக்கும் : ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace