|
| நடப்பாண்டில் ரூ.110 கோடியில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்பு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 16:25 IST ) | |
நடப்பாண்டில் ரூ.110 கோடி செலவில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில் வெளியிட்ட கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளாவன:
* படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.
* சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக சொந்த கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
* இவ்வாண்டு ராமநாதபுரத்திலுள்ள கீழ்செல்வனூர் உள்ளிட்ட 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
* கம்பம், காரைக்குடி, தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம் உள்ளிட்ட 15 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
* சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியிலும், வேலூர் மாவட்டம் அரியூரிலும் புதிதாக காவல் நிலையங்கள் தொடங்கப்படும்.
* கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரூ.3.80 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.
* இந்த ஆண்டு 110 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
* கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
சென்னை நகர காவல் துறை ஆணையரகத்தை பிரித்து புறநகர் பகுதிகளுக்கென்று புதிய காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|