யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மே 30க்கு பிறகு மின்வெட்டு இருக்காது: ஆற்காடு வீராசாமி
திருச்சி (ஏஜென்சி), 12 மே 2008   ( 11:56 IST )
தமிழகத்தில் வரும் 30ம் தேதிக்கு பிறகு மின்வெட்டே இருக்காது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதியளித்துள்ளார்.

திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் மாவட்ட திமுக அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆற்காடு வீராசாமி பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ம் தேதிக்கு பிறகுதான் காற்றாலை மூலம் மின்உற்பத்தி தொடங்கும்.

ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல் 27ம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கிவிட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறவேண்டிய தேவையில்லை.

தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒருநாள் விடுப்பு வழங்கும் திட்டம், கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் உள்ளது.

மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை தொடர்ந்தால், தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்புத் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும்.

அதேபோல, தொழிற்சாலைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த யூனிட் ஒன்றுக்கு 10 பைசா சலுகையும், பர்னஸ் ஆயிலுக்கான வாட் வரியும் மே 15ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்படும்.

காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கிவிட்டதால், இம்மாதம் 30க்கு பிறகு தமிழகத்தில் மின்தடையே இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈராக்கில் பலியான தமிழக இளைஞர்கள் உடல் நாளை வருகை
வ‌ங்‌கிக‌ளில் எளிய வழியில் கல்விக் கடன் பெறலாம் : ப.சிதம்பரம்
கூட்டணிக்கு திமுக - அதிமுக தூது : விஜயகாந்த் தகவல்
விலைவாசி உயர்வு: மத்திய அரசுக்கு ஜெ.கெடு
நளினி விடுதலை : வைகோ கோரிக்கை
சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி இந்த ஆண்டே அமல் : ராமதாஸ் வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace