|
| ஈராக்கில் பலியான தமிழக இளைஞர்கள் உடல் நாளை வருகை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 11:33 IST ) | |
ஈராக்கில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சுக்கு பலியான தமிழக இளைஞர்களின் உடல்கள் நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது.
ஈராக்கில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருந்தனர்.
கடந்த 8ம் தேதி, இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவ முகாமுக்கு கார்களை ஓட்டிசென்றனர். அப்போது, வாகனங்கள் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் இருவரும் பலியாகினர்.
இதுகுறித்து செந்தில் மற்றும் ரமேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரது உடல்களையும் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைதொடர்ந்து, தமிழக அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு உதவி கோரியது. அதன்படி, தமிழக இளைஞர்களின் உடல்களை நாளை சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|