யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விலைவாசி உயர்வு: மத்திய அரசுக்கு ஜெ.கெடு
சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008   ( 14:31 IST )
இன்னும் 15 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு விலைவாசியை கட்டுப்படுத்த தவறினால் மத்திய அரசுக்கு எதிராநாடு தழுவிய அளவில் திமுபோராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரிசி, பருப்பு, உப்பு, சமையல் எண்ணை, காய்கறிகள், பழங்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. கட்டுமான பொருட்கள் விலை சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந் துள்ளன. கடந்த சில மாதங் களில் பல மடங்கு விலைகள் உயர்ந்துள்ளன.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாமானிய மக்களின் பிரச்சினை புரியவில்லை. அதை தீர்த்து வைக்கவும் தெரியவில்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை. இறக்குமதி பொருள் விலை ஏற்றம், அமெரிக்க கொள்கை, சர்வதேச விலை என்று ஏதேதோ சொல்கிறார்கள்.

செங்கல்பட்டில் விளையும் புளி, வேதா ரண் யத்தில் உற்பத்தியாகும் உப்பு, நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டை, ஈரோட்டில் விளையும் மஞ்சள் பற்றி சொல்கிறோம். இவற்றை சென்னை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் எப்படி விலை ஏற்றம் வந்தது?

விலை ஏற்றத்துக்கு ஆன் லைன் வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் ஆகியவைதான் முக்கிய காரணமாக உள்ளது.

ஆன் லைன் வர்த்தகம் மூலம் பொதுவளத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. எனவே ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் 50 ஆயிரம் டன் வரை இருப்பு வைக்கலாம் என்று இருப்பதை குறைக்க வேண்டும்.

பதுக்கல் மீது அரசு எந்திரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். இவற்றை செய்தால் தானாக விலை குறையும்.

விவசாயத்தால் லாபம் இல்லை என்பதால் விவசாயிகள் அந்த தொழிலை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு உரிய மானியம் வழங்கி விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சுங்கவரி, கலால் வரியை குறைக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை 15 நாட்களுக்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுத்து விலைவாசியை கட்டுப்படுத்த தவறினால் பலவீனமான, ஊழல் நிறைந்த இந்த அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

விலை ஏற்றத்தை குறைப்பதாக கூறி மத்திய அரசு எடுத்த எந்த நடவடிக்கையும், பலன் அளிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு தடவை நடவடிக்கை எடுக்கும்போதும் பணவீக்கம் அதிகரித்தபடி இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நளினி விடுதலை : வைகோ கோரிக்கை
சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி இந்த ஆண்டே அமல் : ராமதாஸ் வலியுறுத்தல்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் தமிழக இளைஞர்
பொறியியல் படிப்பு : இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி : மாணவ‌ர்க‌‌ள் 5 பேர் த‌ற்கொலை
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace