|
| நளினி விடுதலை : வைகோ கோரிக்கை |
| தூத்துக்குடி (ஏஜென்சி), 11 மே 2008 ( 12:55 IST ) | |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தண்டனை காலம் முடிந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :
இலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு உணவு, மருந்து பொருள்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப கடந்த 14 மாதங்களாக அனுமதி அளிக்காதது ஏன்? இதுகுறித்து பிரதமரிடம் கேட்டால் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதே என்கிறார். இதற்குப் பின்னணியில் இருந்து தடுப்பது யார்?
சேது சமுத்திரத் திட்டம் தேவையான திட்டம். அதை இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிவிட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதிதான். மாற்று வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை.
நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருப்பதால் விலைவாசி உயர்வு பாதிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
யாருக்கு வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. மணல் கொள்ளையர்களுக்கும், பெரும் பண முதலைகளுக்கும் தான் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. ஆனால், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லை.
தமிழகத்தில் காவல் துறையின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரச்னைகளில் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.
இவ்வாறு வைகோ கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|