யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி இந்த ஆண்டே அமல் : ராமதாஸ் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008   ( 12:40 IST )
சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை இந்த ஆண்டே அமல்படுத்வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் அவர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ன் போது கூறியதாவது :

பிளஸ் 2 தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட, மொத்த மதிப்பெண்களிலோ அல்லது தனிப் பாடத்திலோ முதல் 3 இடங்களில் ஒன்றைக் கூட பிடிக்கவில்லை.

இந்நிலைக்கு சமச்சீர் கல்வி இல்லாததே காரணம். அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்கு அரசு பொறுப்பேற்பதுடன், உறுதி அளித்தபடி இந்தாண்டே சமச்சீர் கல்வி கொண்டு வர வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைத்துள்ளது தேவையில்லாதது. தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமாக ஒரு லட்சம் பொறியியல் இடங்களே உள்ளன. ஆனால் அதைவிட அதிகளவிலான மாணவர்கள் 60 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தனியார் கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக, பணப்பெட்டியை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கட்டணம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டால் பா.ம.க மாணவர் சங்கம் எதிர்த்துப் போராடும்.

கல்விக்கட்டணத்தை குறைப்பதுடன், கட்டாய நன்கொடையை தடுத்தால் மட்டுமே காலியிடங்கள் நிரம்பும். ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் தமிழக இளைஞர்
பொறியியல் படிப்பு : இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி : மாணவ‌ர்க‌‌ள் 5 பேர் த‌ற்கொலை
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
மு.க.அழகிரி விடுதலை: கருணாநிதி மகிழ்ச்சி
மருத்துவ படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace