|
| மு.க.அழகிரி விடுதலை: கருணாநிதி மகிழ்ச்சி |
| சென்னை (ஏஜென்சி), 10 மே 2008 ( 12:18 IST ) | |
தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில், தனது மகன் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் திமுக அமைச்சராக இருந்தவர் தா.கிருட்டிணன். மதுரையை சேர்ந்த இவர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டில் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்பட 13பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், கொலை குற்றத்துக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அழகிரி உள்பட 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
தீர்ப்பு வெளியான பிறகு, மு.க.அழகிரி சென்னை வந்து தனது தந்தையும், முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து ஆசிப் பெற்றார்.
மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கருணாநிதி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, "இது அதிமுக ஆட்சியாளர்களால் வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் மு.க. அழகிரிக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|