யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மே இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு!
சென்னை (ஏஜென்சி), 10 மே 2008   ( 11:12 IST )
த்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் வேலூரில் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் தீயில் கருகின. இந்த சம்பவம் மாணவர்கள் மற்று பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறியதாவது: வேலூரில் 10‌ம் வகு‌ப்பு ‌விடைத்தாள் திருத்தும் மையத்தில் 12 ஆயிரத்து 804 ஆங்கிலம் (2-வது தாள்) விடைத்தாள்கள் தீயில் கருன. இதில் 9 ஆயிரத்து 600 விடைத்தாள்கள் விளிம்பு பகுதியில் மட்டும் சிறிது கருகி இருந்தன. அவை திருத்தப்பட்டு விட்டன.

2 ஆயிரத்து 342 விடைத்தாள்களில் எழுத்துக்கள் நன்றாக தெரிந்தன. அவையும் திருத்தப்பட்டு விட்டன.

தீயை அணைக்கப்பதற்காக தண்ணீர் பீய்ச்சியபோது 862 விடைத்தாள்கள் சேதமாகின. அவற்றில் 300 தாள்கள் திருத்தும் நிலையில் உள்ளன.

இதில் 562 விடைத்தாள்கள் மட்டும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அந்த மாணவர்களுக்கு என்ன பரிகாரம் வழங்கலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 31‌ம் தேதிக்குள், முடிந்தவரை வெகுவிரைவில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப்ளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 16ல் விண்ணப்பம்
'டாஸ்மாக்' மூல‌மாக ரூ.8,800 கோடி வருவாய்
சாலை விபத்து : தமிழகத்தில் ஓராண்டில் 12,000 பேர் பலி
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 50.23 கோடி உதவி
புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை : கருணாநிதி
ப்ளஸ் 2 :தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace