|
| ப்ளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 16ல் விண்ணப்பம் |
| சென்னை (ஏஜென்சி), 10 மே 2008 ( 10:48 IST ) | |
ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுதுவதற்காக வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 84.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தோல்வி அடைந்த மாணவர்கள், இந்த ஆண்டிலேயே படிப்பை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வு அடுத்தமாதம் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி அல்லது மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
கடந்த மார்ச் 2008ல் தேர்வு எழுதாமல், முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால், அரசு தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள் அல்லது மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகங்களிலேயே ஜூன் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 23ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கால அட்டவணை விபரம்:
ஜூன் 23: காலை - தமிழ் முதல் தாள்
ஜூன் 24: காலை - தமிழ் 2-வது தாள்
ஜூன் 25: காலை - ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 26: காலை - ஆங்கிலம் 2-வது தாள்
ஜூன் 27: காலை - இயற்பியல், வணிகவியல்
ஜூன் 27 : மாலை - உளவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து
ஜூன் 28: காலை - வேதியியல், பொருளாதாரம்
ஜூன் 30: காலை - கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல்
ஜூன் 30 : மாலை - அடிப்படை அறிவியல், புவியியல்
ஜூலை 1: காலை - உயிரியியல், வரலாறு, தாவரவியல்,
ஜூலை 1: மாலை - தொழில் பாடங்கள்
ஜூலை 2: காலை - உயிரி வேதியியல், கணிணி அறிவியல், அரசியல் அறிவியல்
ஜூலை 2 : மாலை - மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ்
ஜூலை 3: காலை - வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ்.
ஜூலை 3 : மாலை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், மனை அறிவியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|